இந்திய விடுதலை நாள் என்றால் என்ன?

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5-ம் நாள் இந்திய மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விடுதலை நாள் என்பது, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து, தனி நாடானதையே இந்திய விடுதலை நாள் என்று அழைக்கிறோம்.

இந்தியா விடுதலை அடைந்த நாளன்று, அனைவருக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்நாளில் இந்திய நாட்டின் பிரதமர், டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். பின், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும், அந்தந்த மாநில முதலமைச்சர் கொடியேற்றி மக்களிடம் உரையாற்றுவார். மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள். மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலகங்களில் அதன் உயர் அதிகாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.