இந்தியா 20 குண்டு போட்டால் நாம் 50 குண்டு போட வேண்டும்...பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேட்டி..!!

  • காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் மீது

By Fahad | Published: Apr 05 2020 12:00 AM

  • காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் பலியாகினர்.
  • போரென்று வந்தால் இந்தியா பாகிஸ்தானை 20 குண்டுகளில் அழித்துவிடும் என்று பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.இதனால் இரு நாட்டுக்கும் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷரப், செய்தியாளர்களிடம் கூறுகையில்  இந்தியா_வுக்கு எதிராக ஒரு ஆட்டோமெட்டிக் குண்டை இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்தினால், இந்தியா  20 குண்டுகளை பாகிஸ்தான் மீது பயன்படுத்தி நம்மை முற்றிலுமாக அழித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியா மீது முன்கூட்டியே 50 குண்டுகளை நாம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Related Posts