அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் வஹாப் ரியாஸ் இரண்டாமிடம்!

நேற்றைய  போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான்  49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் 8 ஓவர் வீசி 29 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டை பறித்தார்.இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்தார் வீரர்களில் வஹாப் ரியாஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் உலகக் கோப்பையில் 55 விக்கெட்டை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.அடுத்த இடத்தில் வஹாப் ரியாஸ் 33  விக்கெட்டை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
வாசிம் அக்ரம் – 55
வஹாப் ரியாஸ் – 34 *
இம்ரான் கான் – 34

author avatar
murugan