மத்திய  பட்ஜெட் 2019: மீனவர்களின் கோரிக்கைகள் என்ன ?

இரண்டாவது முறையாக மோடி  பிரதமராக பதவி ஏற்ற பின்னர் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்சர்  பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் மத்திய  பட்ஜெட்டில்  பல கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.குறிப்பாக  மீனவர்களுக்கு வரிவிலக்குடன் கூடிய மானிய டீசல், ஏற்றுமதி ரக மீன்களுக்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம், மீனவர்களுக்கு என தனியாக கூட்டுறவு வங்கி ,மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப்படகுகள் கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்  என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.