நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

  • உச்ச்சநீதிமன்றத்தில் இன்று புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.
  • ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசிக்க  நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின்  தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுகிறது.
  • வருகின்ற 8-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை தியாராயநகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு இந்த கூட்டம்  நடைபெறுகிறது.

திமுக தலைவர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. ,எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  வருகின்ற 8-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை தியாராயநகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு -இல் உள்ள அரங்கில் நடைபெறும்.

மூன்று வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இது தொடர்பாக உச்ச்சநீதிமன்றத்தில் திமுக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .அதில்  புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில்ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆலோசிக்க  நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. ,எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  வருகின்ற 8-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை தியாராயநகரில் உள்ள ஹோட்டல் அக்கார்டு -இல் உள்ள அரங்கில் நடைபெறும்.அதுபோல மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி. ,எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.