நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு  மக்களிடம் உரையாற்றுகிறார்.

கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பும் விவகாரமாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம் தான்.திடீரென்று காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.அங்குள்ள முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.காஷ்மீர் எல்லையிலும் சிறிது பதற்றம் நீடித்தே வந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் மத்திய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.

அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில்  இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு  மக்களிடம் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.குறிப்பாக காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.