நான் உடல் எடையை குறைக்காததற்கு இது தான் காரணம்! பிரபல பாலிவுட் நடிகை விளக்கம்!

  • நான் உடல் எடையை குறைக்காததற்கு இது தான் காரணம்.
  • பிரபல பாலிவுட் நடிகை விளக்கம். 

நடிகை வித்யாபாலன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாவார். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், உடல் எடை அதிகரித்தால் நடிகர், நடிகைகளுக்கு உடல் எடை அதிகரித்தால், பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்று கூறுவது உண்டு. ஆனால், இந்த கூற்றை நடிகை வித்யாபாலன் உடைத்து எறிந்துள்ளார்.

இந்நிலையில், நடிகை வித்யாபாலன் தனது உடல் எடை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில், “எனக்கு ஒரு அரிய வியாதி காரணமாக எடை கூடியது. அதை குறைத்தால் இன்னும் சில பிரச்சினைகள் வரலாம் என்று டாக்டர்கள் சொன்னதால் எடையை குறைக்கவில்லை. இதற்கு மேல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்கிறேன். எடை கூடியதால் வாய்ப்புகள் வராமல் இல்லை. முன்பை விட அதிக படங்கள் வருகின்றன.” என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.