அடடே… இதுவும் நல்ல தான் இருக்கு…!!! எடை இழக்க எளிதான உடற்பயிற்சி….!!!

இன்றை நாகரிகமான உலகில் உடல் எடையை இழப்பதற்காக பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் நன்மைகளை தருவதைவிட அதிகமாக பல பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இவ்வளவு நாளும் உடல் எடையை குறைப்பதற்கு எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று தான் யோசிப்பதுண்டு.

ஆனால், தற்போது நமது உடல் எடையை குறைப்பதற்கு எந்தெந்த உடற்பயிற்சி முறைகளை கையாண்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்று பார்ப்போம்.

மாடிப்படிகள் :

Image result for மாடிப்படிகளை பயன்படுத்துவதன் மூலம் நமது எடையை குறைக்கலாம்.

அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் மாடிப்படி உள்ளது. அப்போது மேலே செல்வதற்கு லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்துவதன் மூலம் நமது எடையை குறைக்கலாம்.

உட்கார்ந்து எழுதல் :

Image result for உட்கார்ந்து எழுதல் :

நாம் நமது வீட்டிலோ அல்லது வேறு எங்கேயாவது உட்கார்ந்து எழும் போது, கைகளை தரையில் ஊண்டிக்கொண்டோ அல்லது வேறு எதையாவது பிடித்துக்கொண்டோ எழும்புவது தான் அதிகாமானோரின் வழக்கம். அப்படி செய்யாமல், உடனே எழும்புவது உடல் எடையை குறைப்பதற்கான மிக சிறந்த உடற்பயிற்சி.

படுக்கை உடற்பயிற்சி :

Image result for படுக்கை உடற்பயிற்சி :

தொப்பையை குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்னவென்றால் அது படுக்கை உடற்பயிற்சி தான். தரையில் படுத்துக்கொண்டு டிவி பார்க்கும்போது, கைகளை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும், உடல் எடையும் குறையும்.

ஜாக்கிங் :

Related image

ஜாக்கிங் என்று சொன்னது உடனே வெளியில் தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. நாம் வீட்டில் டிவி பார்க்கும் போது கூட வீட்டில் வைத்து நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.

குதிக்கும் பயிற்சி :

Related image

சிறுவயதில் படத்தில் காட்டியபடி குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டிருப்போம். ஆனால், அத்தகைய குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டாலும், உடலில் ஆங்காங்கு ஒட்டியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment