வெறும் 5 நிமிடத்திலே, தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட் போனை கண்டுபிடித்து விடலாம்! எப்படி தெரியுமா..?

59

முன்பெல்லாம் திருட்டு என்பது ஒரு சில குறிப்பிட்ட வகையில் மட்டுமே நடந்து கொண்டு வந்தது. ஆனால், இன்றைய தொழிற்நுட்ப உலகில் பல விதத்திலும் திருட்டு நடந்து கொண்டு வருகிறது. இந்த திருட்டில் நாமும் ஒரு அங்கமாகவே இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். நாம் ஸ்டேட்டசாக போட கூடிய தகவல்களை வைத்தே நம்மை பற்றி நம்மை விட தெளிவாக வேறொருவருக்கு உணர்த்தி விடுகிறோம்.

இந்த நிலை திருடர்களுக்கு மிக எளிமையான வழியை மேப் போட்டு காட்டுகிறது. இப்படி தான் நமது ஸ்மார்ட் போன் கூட திருட்டு போகிறது. “முள்ளை முள்ளால் எடுப்பது” என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்கள் திருட்டு போன மொபைலை தொழிற்நுட்பத்தை வைத்தே நம்மால் கண்டறிய இயலும். இதை செய்ய வெறும் 5 நிமிடம் மட்டுமே போதும். இனி, ஒரு கை பார்த்து விடுவோம் வாங்க!

ஜிமெயில்
உங்கள் மொபைலை நீங்கள் ஜிமெயிலுடன் இணைத்திருப்பது வழக்கம் தான். நாம் இதை வைத்து தான் உங்களது மொபைலை கண்டுபிடிக்க போகிறோம். அதற்கு முதலில் “google dashboard” என்று உங்களின் தேடு பொறியில் (Browser) டைப் செய்ய வேண்டும். அதன் பின் அதில் வர கூடிய முதல் லிங்க்கை க்ளிக் செய்து உள் நுழையவும்.

திருட்டு போன இடம்
அடுத்து உங்களது ஜிமெயிலை அதில் டைப் செய்து உள்ளே நுழையவும். இதில் “Location History” என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து க்ளிக் செய்யவும். இதில் உங்களது மொபைல் இறுதியாக சுவிட்ச் ஆப்ஃ செய்த முகவரியை தெளிவாக காட்டும்.

கண்டுபிடிக்க…
இதன் பின்னர், “find my device android” என்று பிரௌசரில் டைப் செய்து, அதில் வர கூடிய முதல் லிங்க்கை க்ளிக் பண்ணவும். இதில் உங்களது ஜிமெயில் மற்றும் பாஸ்வர்ட் டைப் செய்து உள் நுழையவும். இதில் உங்களது ஜிமெயில் அக்கௌன்ட் உள்ள மொபைல்கள் அனைத்தையும் காட்டும்.

அடுத்து என்ன?
இதில் உங்களது மொபைல் பெயரை க்ளிக் செய்து, லொகேஷன் எங்குள்ளது என எளிதாக கண்டறியலாம். மேலும், இதில் 3 ஆப்ஷன்கள் உள்ளன…

Play Sound – உங்களது மொபைலுக்கு 5 நிமிடம் வரை ரிங் செய்யலாம்.
Lock Device – உங்களது மொபைலை முழுவதுமாக லாக் செய்யலாம். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தவுடன் ஜிமெயில் மற்றும் பாஸ்வார்ட்டை மட்டும் டைப் செய்தால் போதும். உங்களது மொபைலை திருடிய நபரால் எதுவுமே செய்ய இயலாது.
Erase Device – மொபைலில் உள்ள அனைத்து டேட்டா-களையும் நாம் முற்றிலுமாக அழித்து விடலாம். இதனால் உங்களது முக்கியாக தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

இந்த வழியை உங்களது நண்பர்களுக்கும் தெரிவிக்க விரும்பினால் இந்த தொகுப்பை பகிரவும்.