தமிழக அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை – கே.எஸ் அழகிரி

தமிழக அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை – கே.எஸ் அழகிரி

Default Image

உலக முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் சாமானியர்கள் முதல் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே காங்கிரஸ் தொண்டர்கள் தினமும் 50 பேரிடமாவது தொலைபேசி மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரசாரத்தை நடத்தி வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுபட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. கொரோனாவைத் தடுப்பதற்கு அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்து வருகிறார்கள் என்று கூறினார்.

ஆனால், ஒரே நாளில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஊரடங்கு செய்ததுதான் தவறு என்று குறிப்பிட்டார். சென்னையில் பகுதி பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திருந்தால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் குவிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த அதிரடி அறிவிப்பு மக்களை பதற்றப்படுத்திவிட்டது என தெரிவித்தார். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்தே வந்தவர்கள் பற்றிய செய்தியெல்லாம் வருகிறது. மோடியைப் போல எடப்பாடியும் மக்களைத் திணறடித்துவிட்டார். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் அமைதி காக்கிறோம் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார். 

Join our channel google news Youtube