தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது! அங்கே சோதனை நடத்த தயாரா?கனிமொழி கேள்வி

தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது. அங்கே சோதனை நடத்த தயாரா? என்று

By venu | Published: Apr 17, 2019 10:17 AM

தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது. அங்கே சோதனை நடத்த தயாரா? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.  நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கிறார்.அவர் தங்கியிருந்த வீட்டில் 2 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.பின்னர் அந்த சோதனை நிறைவு பெற்றது. இதன் பின்னர் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கூறுகையில், எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே என் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள். தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் இருக்கிறது. அங்கே சோதனை நடத்த தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நேரத்தில் சோதனை செய்யலாமா எனக் கேட்டதற்கும் அவர்களிடம் பதில் இல்லை சோதனை நடத்திய இடத்தில் எனக்கு சம்மன் அளித்தார்கள். அது சட்டத்திற்கு புறம்பானது. வருமானவரித்துறை சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தோம். தேனியில் அதிமுக வேட்பாளர் மற்றும் தமிழிசை வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்? என்றும் 2 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது. தோல்வி பயத்தால் தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்தலாம் என்ற முடிவில் வந்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம், வருமானவரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயற்சி செய்கிறது. எந்தவித அடிப்படையும் இல்லாமல் எங்கள் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள். திமுக மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்றே சோதனை நடத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.
Step2: Place in ads Display sections

unicc