நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் ! தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர்  விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம்

By venu | Published: Sep 21, 2019 04:36 PM

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் மாணவர் உதித் மீது தேனியில்  உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக தனிப்படை காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் உதித் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி தனிப்படையினர் சென்னைக்கு விரைந்தனர்.ஆனால் அங்கு அவர் இல்லாத காரணத்தால் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின் மாணவர் உதித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தனிப்படையினர் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc