கனமழை எதிரொலி ! பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி ! பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று  ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.