சூப்பர் ஸ்டாரும் – தல அஜித்தும் விரைவில் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர்!

  • ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் ஹைதிராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
  • அஜித் நடிக்க வினோத் இயக்க உள்ள புதிய படமும் விரைவில் ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து உருவாக்கவுள்ள ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

தல அஜித் தனது 60வது திரைப்படத்தை விரைவில் தொடங்க உள்ளார். இந்த படத்தை வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

இந்த இரு படங்களும் விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். இரு படங்களுமே ஹைதிராபாத் நகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் போட்டு எடுக்க உள்ளனராம்.  இரு படங்களும் ஒரே நேரத்தில் தொடங்க உள்ளதால் விரைவில் இருவரும் சந்தித்து கொள்ளும் போட்டோ வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.