வரிசெலுத்துவோருக்கு இனி நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது!

ஏற்படும் சிறு தொகை வேறுபாட்டுக்காக வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யப் படும் போது  வரிசெலுத்துவோருக்கு இனி நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை ரீதியாக இதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறு தொகை வேறுபாட்டால் ஏற்படும் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதலே இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment