தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் – இன்றுடன் நிறைவு பெறுகிறது

  • இந்தாண்டின் முதல் தமிழக சட்டபேரவை கூட்ட தொடர் புத்தாண்டை அடுத்து கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது.
  • இன்றுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைகிறது.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் ,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்  ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது  குறித்து  6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.இதனையடுத்து ஆண்டின்  முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது.முதல் நாளான அன்று (ஜனவரி 6) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.

பின்னர்  சட்டப்பேரவை கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி கொறடா துரைமுருகன் உள்ளியிட்டார்கள் கலந்துகொண்ட ஆய்வுக்குழுவில் ஆலோசனை நடத்தி வரும் 9ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று வரை இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்ட தொடர் நடைபெறுகிறது.