உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவின் சரத் வெள்ளியும்,வருண் சிங் வெண்கலமும் வென்றனர்.

லண்டன்: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் சரத் (வெள்ளி), வருண் சிங் (வெண்கலம் ) பதக்கம் வென்றுள்ளனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் லண்டனில் நடக்கிறது. இதன் உயரம் தாண்டுதல் (எப்-42) போட்டியில் இந்தியா சார்பில் சரத் குமார், வருண் சிங் பங்கேற்றனர். இதில் 1.84 மீ., துாரம் தாண்டிய சரத் வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் 1.77 மீ., துாரம் தாண்டி வெண்கலம் கைப்பற்றினார். அமெரிக்காவின் … Read more

தூத்துக்குடி அணி வெற்றி

டி.என்.பி.எல்: திண்டுக்கல்லுக்கு எதிரான போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன் இலக்கு கொண்டு ஆடிய திண்டுக்கல் அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் டி.என்.பி.எல் தொடரில் தூத்துக்குடி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை வீரர்களிடம் 100 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்: சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளர் ஜான் கிரிகோரி

சென்னை:சென்னையின் எஃப்.சி. வீரர்களிடம் 100 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறேன் என அதன் புதிய பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார். இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் சென்னையின் எஃப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜான் கிரிகோரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னையின் எப்.சி. அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், வீட்டா டேனி ஆகியோர் கலந்துகொண்டு புதிய பயிற்சியாளரை … Read more

உலக ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் அபய் சிங்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.நியூஸிலாந்தின் டெளரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்றில் அபய் சிங் 10-12, 11-7, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் எகிப்தின் முகமது எல்ஷமியைத் தோற்கடித்தார்.அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான அதியா ராகவன் 3-11, 11-8, 7-11, 11-4, 3-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் அலி ஹுசைனிடம் தோல்வி கண்டார்.

முதல் பயிற்சி ஆட்டத்தில் குல்தீப், ஜடேஜா அசத்தல்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினர். இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் 26ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவனுடன் இந்திய அணி 2 நாள் போட்டியில் மோதுகிறது. கொழும்பு கிரிக்கெட் … Read more

TNPL டி20 தொடர் இன்று கோலாகல தொடக்கம்: பேட்ரியாட்ஸ் – டிராகன்ஸ் மோதல்

சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் போட்டித் தொடரின் 2வது சீசன், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழக அளவில் 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் மோதும் இந்த தொடர், கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகமாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் … Read more

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் ரத்து; மு.க ஸ்டாலின் கண்டனம்

2019 ஆம் ஆண்டு வரை சென்னையில் டென்னிஸ் போட்டிகளை நடத்த ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வது தொடர்பான தகவல் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் உறுதி செய்துள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த சென்னை டென்னிஸ் ஓபன் போட்டிகள், துவக்கத்தில் கோல்டு ஃபிளேக் ஓபன் என அறியப்பட்டது. பின்னர் டாடா குழுமத்தின் ஆதரவு பெற்று டாடா ஓபன் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து வர்த்தக மாற்றத்தின் காரணமாக, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் … Read more

பைனலில் இந்திய அணி!!

டெர்பி: பெண்கள் உலக கோப்பை தொடரின் பைனலுக்கு ஜோராக முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங்கில் ‘சூறாவளியாக’ சுழன்ற ஹர்மன்பிரீத் கவுர், 115 பந்தில் 171 ரன்கள் குவித்தார்.இங்கிலாந்து மற்றும் வேல்சில், பெண்களுக்கான 11வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது அரையிறுதியில் நேற்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் துவங்க சுமார் மூன்று மணி நேரம் தாமதம் ஆனது. … Read more

ஆஸ்திரேலியாக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தார்:ஹர்மன் ப்ரீத் கவுர்

டெர்பி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இந்திய வீராங்கனைர்  ஹர்மன் ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன் அடித்துள்ளார்.. ஆஸ்திரேலியா அணி 282 ரன்களை 42 ஓவர்களில் எடுக்க … Read more

உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

டெர்பி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக இன்றைய ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றய போட்டியில் வெற்றி பெறும் அணி 23ம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து … Read more