பாகிஸ்தானில் 100 குடிசைகள் எரிந்து நாசமான அவலம்..!

பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சி என்ற இடத்திலுள்ள குடிசை பகுதியில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் 100 குடிசைகள் எரிந்து நாசமானது என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கராச்சி நகர்  தீயணைப்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு அதிகாரி இனயத் உல்லா கூறிய தகவலின்படி கராச்சி நகரின் ஆற்றங்கரையில் உள்ள லியாரி வெடித்தது தீ குடியிருப்புகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததை அறிந்த தீ அணைப்பு அதிகாரிகள் 10 தீயணைப்பு … Read more

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டு கொலை…!

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் … Read more

கொரோனா தடுப்பூசி போடாத ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது – பாகிஸ்தான் இரயில்வே துறை!

கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்த்து வரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் தவிர்த்து வரக்கூடிய … Read more

மீண்டும் அமெரிக்காவுடனான உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புகிறது – பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியாவைப் போலவே அமெரிக்காவுடனும் உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி இந்தியாவுடனான உறவை சீராக்க மேற்கொண்ட முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை எனவும், ஆனால் கடந்த கால கட்டத்தில் இந்தியா போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு … Read more

பாகிஸ்தான் விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

நேற்று பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எனும்  எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அதே சமயம் ராவல்பிண்டி நகரில் இருந்து காராச்சி நோக்கி சையத் எனும் எக்ஸ்பிரஸ் ரயில்  500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. மில்லட் ரயில் சிந்து … Read more

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியர் கைது!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பாகிஸ்தானியர். உடனடியாக கண்டறிந்து கைதுசெய்த எல்லை பாதுகாப்பு படையினர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக இந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அத்துமீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு பாகிஸ்தான்  நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுள்ளனர். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு … Read more

பாஸ்போர்ட் தொலைந்ததால் 18 வருடங்கள் பாகிஸ்தானில் கைதி ஆக்கப்பட்ட 65 வயது பெண்மணி விடுதலை!

பாகிஸ்தானுக்கு சென்று இருந்த பொழுது பாஸ்போர்ட்டை தவறுதலாக தொலைத்ததால் சட்டவிரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்மணி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார். இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண்மணி ஹசீனா என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்புர் பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் அகமது என்பவரின் மனைவி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பதினெட்டு வருடங்களுக்கு முன்பதாக ஹசீனா தனது … Read more

இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு பாகிஸ்தான் சிறுமிகள்!

இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை கண்டுள்ளனர். இதனையடுத்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த … Read more

வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் வீசிய தந்தை!

வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் வீசிய தந்தையின் செயல் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வசித்து வரக்கூடிய ஒரு நபர் வறுமை காரணமாக தனது வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடனும் கடந்த இரு தினங்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், குடும்பத்தில் வறுமை அதிக அளவில் தலைதூக்கியதை அடுத்து, ஜம்பர் எனும் கால்வாயில் தனது ஐந்து … Read more

பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் கொரானா வைரஸ் தாக்கம் தற்போது பாகிஸ்தானில் தனது வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 380 ஆசிரியர்கள் … Read more