தல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த சூர்யா – ஜோதிகா!

தல அஜித் நடிப்பில் வியாழன் அன்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் வசூலும் நன்றாக இருக்கிறது.

இப்படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யாவும், ஜோதிகாவும் நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் மற்றும் தல அஜித்திற்கு பூங்கொத்து அனுப்பி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.