கர்நாடகா விவகாரம் : நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

கர்நாடகாவில்  ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தள எம்.எல்.ஏ.க்கள்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது .

தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக அந்த  மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த  வழக்கின் விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது.