முதலமைச்சர் , பாஜக எம்.எல்.ஏ வீட்டின் மீது கல் வீச்சு..!

  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
  • நேற்று இரவு அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமான பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு ,சாலைகள் வெறிசோடி கிடைக்கின்றனர்.

எந்த அமைப்பும் , அரசியல் கட்சியினரும்  போராட்டம் அறிவிக்கவில்லை. ஆனால் தன்னிச்சையான போராட்டங்கள் நடக்கின்றனர்.அசாம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க  ராணுவத்தினர் உதவ வேண்டும் என அசாம் மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

அசாமில் நிலவும்  நிலைமையை ராணுவ கமாண்டர்கள் கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ராணுவ வீரர்களை  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்துவதாக கூறியுள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அசாம் முதல்வர் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீசியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் வீட்டையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில்பதட்டமான சூழல்  காணப்படுகிறது.

author avatar
murugan