எனக்கு அவர்கள் போட்டிருக்கும் ட்ரெஸ் கலர் சுத்தமாக பிடிக்கவில்லை! சிஎஸ்க்கே மீதான எதிர்ப்பு பற்றி ஸ்ரீசாந்த் கருத்து!

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, திகார் சிறை, வாழ்நாள் கிரிக்கெட் விளையாட தடை என பலவேறு இன்னல்களை சந்தித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில், சிஎஸ்கே அணியை எதற்காக வெறுக்கிறேன் என கூறியிருந்தார். அதில், சிஎஸ்கே அணியை பிடிக்காததற்கு காரணம், தோனி மற்றும் ஸ்ரீநிவாசன் என பலரும் கூறியிருப்பர். ஆனால், உண்மையில் எனக்கு மஞ்சள் நிறம் சுத்தமாக பிடிக்காது. அதனால் தான், சிஎஸ்கே அணியை பிடிக்காது. அது போல ஆஸ்திரேலியா அணியையும் இதே மஞ்சள் நிறுத்தினால் எனக்கு பிடிக்காது என குறிப்பிட்டார்.
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.