தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம்

By surya | Published: Dec 20, 2019 09:13 PM

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc