இதெல்லாம் செஞ்சா படம் ஹிட்டாகும் : பொன்ராமின் வித்தியாசமான சென்டிமென்ட்

இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என எல்லாம் ஹிட்டடித்தது.
இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. படம் சென்சார் செய்யப்பட்டு நேற்று அதற்க்கு யு சான்று கிடைத்தது.
இப்படத்தின் நீளம் 2மணி நேரம் 38 நிமிடமாகும். இதில் செய்தி என்னவெனாறால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் இந்த இரு படத்திற்க்கும் அதே அளவு நேரம் தான் . ஆதலால் இப்படத்தையும் அதே நேரத்திற்க்கு சுருக்கினால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என இயக்குனர் நம்புகிறார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment