சென்சார் அதிகாரிகளையே மிரள வைத்துவிடுவார் 'இவர்'! ஹீரோ படவிழாவில் ரோபோ சங்கர் புகழாரம்!

இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள

By manikandan | Published: Dec 13, 2019 05:18 PM

  • இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ. 
  • சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. 
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ சங்கர், யுவன் சங்கர் ராஜா, பி.எஸ்.மித்ரன் என படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். ' இந்த பட தயாரிப்பாளர் படத்தின் ஒப்பந்தம் போடும்போதே முழு சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். இப்பட இயக்குனர் மித்ரன் படத்தை எடுத்து முடித்துவிட்டு, சென்சார் போர்டுக்கே டஃப் கொடுப்பார். சென்சார் போர்டு அந்த சீனை எடுக்கலாம் இந்த சீனை எடுக்கலாம் என கூறினார். உடனே செய்தித்தாள், டிவிடி, டிவி சேனல் என போட்டு காட்ட தொடங்கிவிடுவார். அதில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி அவர்களின் வாயை அடைத்துவிடுவார். எப்படியோ அவர்களிடம் போராடி ஹீரோ படத்திற்கு யு சான்று வாங்கிவிட்டார். 'என தனது கலகலப்பான பேச்சினால் ரசிகர்களையும் படக்குழுவினரையும் வெகுவாக கவர்ந்தார்.
Step2: Place in ads Display sections

unicc