போலீஸ் திட்டியதால் தற்கொலை செய்த ராஜேஷ்!!காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ராஜேஷ் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ்.

கடந்த 25ஆம் தேதி சாலையில் காத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இரு காவல்துறையினர் அவரை தகாத வார்த்தையில் கடுமையாக திட்டி உள்ளனர்.அந்த சமயத்தில் காரில் தனியார் நிறுவனத்தில் பணி புணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் இருந்தார்.இதனால் காவலரின் அந்த தகாத வார்த்தைகளை தாங்கமுடியாமல் அன்று மாலையே மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இது தொடர்பாக விசாரித்த காவல்துறை ராஜேஷின் மொபைலை பார்மட் செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாக உணர்ந்த ராஜேஷின் பெற்றோர் மொபைலை பேக்கப் எடுக்கும் போது ராஜேஷ் தனது தற்கொலை வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்திருப்பது தெரியவந்ததுஅதில் தன்னுடைய சாவிற்கு காவல்துறை தான் காரணம் என வாக்குமூலம் அளித்தார்.

பின் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜேஷ் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment