அனுமதியின்றி பேனர் வைப்பதற்கு தடை!மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

By Fahad | Published: Apr 01 2020 02:41 PM

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ  மீது  பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ  பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கு பல தரப்பு மக்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில்  புதுவை முதலமைச்சர் நாராயணசாமி  இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.சுபஸ்ரீ இறந்த செய்தியை கேட்டு மிகவும் மன வேதனையுற்றேன்.  தமிழகத்தை போலவே புதுவையிலும் பேனர் கலாச்சாரம் இருக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க புதுவையில் அனுமதி இன்றி பேனர் வைப்பதற்கு தடை விதிப்பதாக   அறிவித்துள்ளார்.