அனைவரின் கணினியும் கண்காணிக்கும் நடவடிக்கைக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!!

சமீபத்தில் மத்திய அரசு அனைத்து கம்ப்யூட்டர்களில் நடைபெறும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கபடும் என்று கூறி கண்காணிப்பு உரிமையை சில அமைப்புகளிடம் வழங்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தனிமனித உரிமைக்கு எதிரானது என்று எதிர் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து மத்திய அரசு  இது ஒன்னும் புதிய நடைமுறை அல்ல , கடந்த காங்கிரஸ்  கட்சியின் ஆட்சி காலம் முதல் இந்த நடைமுறை உள்ளது என்றும் , தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அனைவரின் கணினியை கண்காணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தடை செய்ய வேண்டி வழக்கறிஞர் ML.ஷர்மர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர் M.L ஷர்மா ஏராளமான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment