ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு! வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக புகார் !

தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த வழக்கை மிலானி என்பவர் தொடர்ந்துள்ளார்.மேலும்  வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக   வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.