ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகனும், நாடுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம்  இருவருக்கும் தொடர்ப்பு இருப்பதாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ தரப்பு இருவரையம் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஓ.என்.சைனி விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில், சிபிஐ தரப்பானது, ‘ ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது.’ என கோரிக்கை வைத்தது.

ஆனால், சிபிஐ-யின் இந்த வாதத்தை நீதிபதி ஓ.என்.சைனி நிராகரித்து இருந்தார். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ‘ இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிணை தொகையாக 1 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. ‘ இதன் மூலம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்க துறை கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரத்தை கைது விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.