எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி.....

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

By leena | Published: Mar 21, 2019 04:35 PM

  • சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
  • எம்.எல்.ஏகனகராஜ் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது. இந்நிலையில்,சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவருக்கு 64 வயது. கனகராஜ் இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கிவிழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, மாரடைப்பால் காலமான சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர், துணைமுதல்வர், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, கனகராஜின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc