மஸராட்டி கிப்லி கார்(Maserati Ghibli Car) மாடல் அறிமுகம்.! பிஎம்டபிள்யூ(BMW) உடன் போட்டியா.?

2018 மாடலாக வந்திருக்கும் புதிய மஸராட்டி கிப்லி கார் (Maserati Ghibli Car)டீசல், க்ரான்ஸ்போர்ட்

By Dinasuvadu desk | Published: Mar 19, 2018 05:17 PM

2018 மாடலாக வந்திருக்கும் புதிய மஸராட்டி கிப்லி கார் (Maserati Ghibli Car)டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய மஸராட்டி கிப்லி காரில் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 275 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. விஎம் மோட்டோரி நிறுவனத்துடன் இணைந்து இந்த எஞ்சினை விசேஷமான தொழில்நுட்ப அம்சங்களுடன் மஸராட்டி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. புதிய மஸராட்டி கிப்லி கார் 0- 100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது. புதிய மஸராட்டி கிப்லி கார் யூரோ-6 மாசு உமிழ்வு தர எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த காரில் ஆட்டோ ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பமும், குறைவான மாசு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் ஆட்புளூ என்ற தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது. புதிய மஸராட்டி கிப்லி காரின் க்ரான்லூஸோ மாடலின் வெளிப்புறத் தோற்றம் கூடுதல் மெருகேற்றப்பட்டு வந்துள்ளது. இந்த காரில் 12 விதமான முறையில் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் மெமரி திறன் மற்றும் முழுவதுமான பிரிமியம் லெதர் அல்லது எர்மெனிகில்டோ ஸெக்னா சில்க் எடிசன் என்ற விசேஷ அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷனை தேர்வு செய்யலாம். ஸ்போர்ட் பெடல்கள், அதிக பிடிப்புடன் கூடிய விசேஷ ஸ்டீயரிங் வீல் அமைப்பு, பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக மேனுவலாக காரை ஓட்டுவதற்கான வாய்ப்பும் இந்த காரில் இருக்கிறது. இந்த காரின் டீசல், க்ரான்ஸ்போர்ட் மற்றும் க்ரான்லூஸோ மாடல்களுக்கு இடையே வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்காக முன்புறம் மற்றும் பின்புற பம்பர்களில் வடிவமைப்பு வித்தியாசங்கள் இருக்கின்றன.  
Step2: Place in ads Display sections

unicc