கிம் ஜாங் உன் VS டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இடம் ஆதிகாரபூர்வ அறிவிப்பு...!!

வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு

By Dinasuvadu desk | Published: Feb 10, 2019 10:05 PM

வடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தற்போது சந்திப்பு குறித்த அதிகார தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இந்த மாத இறுதியில் 27 மற்றும் 28_ஆம் தேதில் கிம் ஜாங் உன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc