தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கிய கரூர் எம்பி

கரூர் தொகுதி எம் பி ஜோதிமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியுள்ளார். 

கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பின்னர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர்.மேலும் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.இந்நிலையில் கரூர் தொகுதி எம் பி ஜோதிமணி, அவசியம் கருதி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மீண்டும். ரூ 57,17,220 ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் .இதுவரை மொத்தம் ரூ1,89,89,160 ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.