ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்

ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது சிறையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  வரும் 14-ஆம் தேதி ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.