ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, மே 3-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.எனவே ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கையில்,ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம் தவிர்க்க இதுகுறித்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு மத்திய – மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.