இந்திய மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்! அவர்களின் பொருளாதாரம் நன்றாகதான் உள்ளது! மத்திய அமைச்சர் பகீர்!

இந்திய பொருளாதாரமானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு காலாண்டில்

By manikandan | Published: Nov 16, 2019 05:45 PM

இந்திய பொருளாதாரமானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு காலாண்டில் 5 சதவீதம் குறைந்தது.இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த 11 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில்  மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி குறிப்பிடுகையில், ' விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை சரிவடையும். பின்னர் அது சுழற்சி முறையில் மீண்டும் உயரும். அதே போல விரைவில்  இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிடும். பிரதமர் மோடியின் நற்பெயரை களங்கப்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எனவும், குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc