ஒரு லட்டு இலவசம்! இன்னொரு லட்டு 50 ரூபாய்! திருப்பதியில் புதிய அதிரடி விலையேற்றம்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்க்காக வந்து செல்கின்றனர். இவர்களில் தர்ம தரிசனம், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் என பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
அவ்வாறு காத்திருந்து தரிசனம் செய்யும் பக்கதர்களுக்கு சிறப்பு சலுகையாக 70ரூபாய்க்கு 4 லட்டுகளுக்கான டோக்கன் வழங்கப்படும். தோராயமாக ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் ஆகும். இதனால் இந்த சிறப்பு லட்டு சலுகையினால் ஆண்டுக்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த தற்போது தரிசனத்திற்காக காத்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு ஒன்று கொடுத்துவிட்டு, மேற்கொண்டு வாங்கும் ஒவ்வொரு லட்டிற்கும் ரூபாய் 50 கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.