5 விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முகமது ஷமி!

நேற்றைய  போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர் வீசி ஒரு ஓவர் மெய்டன் செய்து 69 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டையும் பறித்தார்.இதன் மூலம் உலகக் கோப்பையில் இந்திய பந்து வீச்சாளர்களில் 5 விக்கெட்டை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முகமது ஷமி இடம் பிடித்து உள்ளார்.

இதற்கு முன் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங் 5 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.அதன் பிறகு தற்போது  நடப்பு உலகக்கோப்பையில் முகமது ஷமி 5 விக்கெட்டை வீழ்த்தி இப்பட்டியலில் இடம் பிடித்தார்.

கபில் தேவ் (1983)
வெங்கடேஷ் பிரசாத் (1999)
ராபின் சிங் (1999)
ஆஷிஷ்நெஹ்ரா (2003)
யுவராஜ் சிங் (2011)
முகமது ஷமி (2019)

author avatar
murugan