பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன்-2 ஓர் விண்வெளி படமா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. கமலஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பலர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். ரத்தினவேலு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் முதலில் வெளியாகின. இந்நிலையில், இப்படத்திற்காக விண்வெளி போன்ற ஒரு செட் தற்போது உருவாகி வருகிறதாம். இந்த செட்டை கலை இயக்குனர் முத்துராஜ் மும்முரமாக  தயாரித்து வருகிறாராம். அதாவது, கதைப்படி வில்லன் தப்பித்து  விண்வெளி செல்வதாக படத்தில் கதை அமைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.