நான் காப்பியடிக்க விரும்பவில்லை! அது எடுபடாது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படம் தமிழில் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படம் தெலுங்கில் ரிமேக் ஆகிறது. இப்படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில், நடிகை சமந்தா நடிக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘நான் த்ரிஷா நடிப்பை அப்படியே காப்பியடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. சாப்பிடுவதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. கதை மக்களை அதிகம் சென்று சேரவேண்டும் என்பதால் தான் எடுத்துள்ளோம்.’ என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.