என் மன உறுதியை குலைக்க முடியவே முடியாது- சிதம்பரம்

  • ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர்

By Fahad | Published: Apr 02 2020 08:50 AM

  • ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வந்தார். 
  • என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.அவர் வந்த பின்பு சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள். என் மன உறுதியை குலைக்க முடியாது. இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது பாஜகவை எதிர்ப்பதில் தென் மாநில மக்கள் விழிப்புடன் இருப்பது போல் நாடு முழுவதும் இருக்க வேண்டும்.பொருளாதார சூழலை பொறுத்தவரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.