நாளைய போட்டியில் இவரின் சாதனையை முறியடிப்பாரா ஹிட் மேன் !

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியுடன் விளையாட உள்ளது.இப்போட்டியில் மூலம் சச்சின் சாதனையை ரோஹித் சர்மா முறியடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்து உள்ளது.

நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 4 சதங்களை விளாசி 544 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.இந்நிலையில் உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசிய வீரர்களில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.சச்சின் உலகக்கோப்பையில் ஆறு சதங்களை விளாசி உள்ளார்.

ரோஹித் சர்மா கடந்த உலகக்கோப்பையில் ஒரு சதமும் , நடப்பு உலகக்கோப்பையில் நான்கு சதமும் அடித்து உள்ளார். உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா மொத்தமாக  5 சதம் அடித்து உள்ளார்.இதன் மூலம் இலங்கை வீரர் குமார் சங்ககாராவின் சாதனையை சமன் செய்தார்.

நாளைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தால் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் உள்ள சச்சின் சாதனையை சமன் செய்வார்.மேலும் ஒரு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

உலகக்கோப்பை தொடரில்  அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.2003-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் குவித்தார்.நாளைய போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தால் அந்த ரன்களை தாண்டவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தான் ரோஹித் சர்மா  இரண்டு இரட்டை சதம் அடித்து உள்ளார். இதனால் நாளைய போட்டியில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

author avatar
murugan