மகப்பேறு விடுப்புக் காலத்தைப் பணிக்காலமாகக் கருதி..!! சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்..!!தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

அரசு பெண் மருத்துவர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, மருத்துவ மேற்படிப்புக்கான சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்ப்புறம், தொலைதூரப் பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்நிலையில் பேறுகால விடுப்பு, ஈட்டு விடுப்பு எடுத்திருந்தால் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்று மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு பெண் மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண் ஊழியர்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் மகப்பேறு விடுப்புக் காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment