அதிமுகவில் இணைந்தால் ஹீரோ, திமுகவில் இணைந்தால் ஜீரோ-தங்க தமிழ்ச்செல்வன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

தங்க தமிழ்ச்செல்வன்  திமுகவில் இணைந்தால் ஜீரோ என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில்  தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், , திமுகவில் இணைந்தால் ஒரு நாள் ஹீரோ, அதிமுகவில் இருந்தால் ஒவ்வொரு நாளும் ஹீரோ.குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.