தஞ்சை தொகுதி வேட்பாளரை அறிவித்த ஜி.கே.வாசன் !!!

  • அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு தஞ்சை தொகுதி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
  • தஞ்சை தொகுதியில்  த.மா.கா சார்பில் என்.ஆர்.நடராஜன்  வேட்பாளராக போட்டியிடுகிறார் என ஜி.கே.வாசன் அறிவித்தார். 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கட்சிக்கு  தஞ்சை தொகுதி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஜி.கே.வாசன் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை என்றால்  தனி சின்னத்தில்  நின்று வெற்றி பெறுவோம் , எனவும் தஞ்சை தொகுதியில்  த.மா.கா சார்பில் என்.ஆர்.நடராஜன்  வேட்பாளராக போட்டியிடுகிறார் என ஜி.கே.வாசன் அறிவித்தார்.
author avatar
murugan

Leave a Comment