நிதி அமைச்சரின் அறிவிப்பு இந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்- பிரதமர்மோடி .!

நிதியமைச்சர் அறிவித்த  இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.

சமீபத்தில் பிரதமர் மோடி பொருளாதார சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், இந்த நிதியால் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த  திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.

அதன்படி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை   சுயசார்பு பாரதம் என்ற பெயரில்  5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை கடந்த புதன்கிழமை முதல் வெளியிட்டு வந்தார். அதில், சிறு, குறு தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கனிமங்கள், நிலக்கரி உற்பத்தி, 100 வேலை திட்டம், ஆகியவற்றிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில்,  நிதியமைச்சர் அறிவித்த  இன்றைய அறிவிப்பில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk