மன்மோகன் சிங்கை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் போது மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில்  இன்று  நிர்மலா சீதாராமன் முன்னாள் பிரதமரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்றது.