பி.எஸ்.என்.எல்லில் 4ஜி சேவை தொடங்குவதற்கான பாதி செலவை ஏற்க மத்திய அரசு முடிவு..!!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான செலவின் பாதித் தொகையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5ஜி சேவையை தொடங்கும் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து செல்கின்றன.

இந்நிலையில், 4ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான பெரும் தொகையை அந்நிறுவனத்தால் தனியாக செலுத்த முடியாது என்பதால், பாதித்தொகையை மத்திய அரசு ஏற்க இருக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment