தமிழகம் முழுவதும் காவல், சிறை, தீயணைப்புத்துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு!

மூன்றே கால் லட்சம் பேர் தமிழகத்தில் காவல்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 2-ஆம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வை  எழுதினர்.

இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பின்னடைவு காலிப்பணியிடங்கள் என மொத்தம் ஆறாயிரத்து 140 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பர் மாதம் தேர்வை அறிவித்தது.

முதல்முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 236 மையங்களில், இன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி உள்ளிட்ட 22 மையங்களில் தேர்வு நடந்தது. காலை பத்து மணி முதல் 11.30 வரை ஒன்றரை மணி நேரம் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை சென்னையில் காவல் ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தனர். எழுத்துத் தேர்வு எளிமையாக இருந்ததாக, தேர்வை எழுதியவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment